பிரபல இசைக்கலைஞர் அமரதேவா காலமானார்!

Actor Thursday, November 3rd, 2016

 

பிரபல இசைக்கலைஞர் பண்டித் டபிள்யூ. டி. அமரதேவா தனது 88ஆவது வயதில் இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக இன்று ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னகுவத்த வடுகே டொன் அல்பேர்ட் பெரேரா இயற்பெயரைக் கொண்ட அவர் தமது புனைப்பெயராக அமரதேவ என்ற பெயரை பயன்படுத்தி வந்தார்.

இந்துஸ்தானி இசையில் தேர்ச்சிப் பெற்ற அமரதேவவுக்கு இந்திய அரசின் கௌரவ உயர் பத்மசிறி விருது 1986ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.2001ஆம் ஆண்டு அவர் பிலிப்பைன்ஸ் மெக்சைசே விருதையும் அவர் பெற்றுக்கொண்டார். இந்த நிலையில் அமரதேவவே மாலைத்தீவு நாட்டின் தேசிய கீதத்தை இசையமைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Actor


வடக்கின் கண்ணி வெடிகளை அகற்ற ஜப்பான் உதவி!
தடை செய்யப்பட்ட பாடல்களை செவிமடுத்தார் எனும் குற்றச் சாட்டில் 25 வயது இளைஞன் கைது!
தாமதமான விமான விவகாரத்தால் பயணிகளுக்கு ரூ. 26 மில். நட்டஈடு!
தராசுக்கு முத்திரையிடும் பணி யாழ். செயலகத்தில் அடுத்த வாரம் ஆரம்பம்!
போக்குவரத்தில் ஈடபடும் தவறுகள் தொடர்பில் அபராதத் தொகை அதிகரிப்பு!