பிரதி அமைச்சருக்கு எதிராக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

Monday, July 4th, 2016

பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவிற்க எதிராக இன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆர்பாட்டமானது மத்துகம கல்வி வலயத்தின் முன்பாக இடம்பெற்றதாகவும், இதன்போது மத்துகம கல்வி வலயத்தின் அனைத்து அதிபர்களும் பங்கு கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் மீகாதென்ன பாடசாலையின் அதிபரை பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தாக்கியுள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். மேலும் குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்; இணைந்து ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்ததாகவும்,எனினும் குறித்த சம்பவத்திற்கு நீதி கிடைக்காத பட்சத்தில் தமது போராட்டம் வலுவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts:


2021 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்படும் - நாடாளுமன...
அடுத்த ஐந்து ஆண்டுகளில் விளையாட்டு மூலம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட இலக்கு – அமைச்சர் நாமல...
அவசர சந்தர்ப்பங்களில் சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல தாமதிக்க வேண்டாம் - சிறுவர் நோய் விச...