பிரதிப் பொலிஸ் மாஅதிபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை!

Tuesday, August 23rd, 2016

தற்போது கடமையில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கும், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு தீர்மானித்துள்ளது. தற்போது கடமையில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக இரண்டு மில்லியன் ரூபா மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்றுக்கொண்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக வழக்குப் பொருளான லொறி ஒன்றை தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தற்போது கடமையில் ஈடுபட்டுள்ள பிரதிப்பொலிஸ் மா அதிபர் குறித்த விசாரணைகள் பூர்த்தியானதும் அந்த அறிக்கை பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இந்த அறிக்கையை பொலிஸ் மா அதிபர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் ஒப்படைத்ததன் பின்னர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இரண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு எதிராகவும் சாட்சியங்கள் கிடைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Related posts: