பிரசவத்தின்போது தாயும் சேயும் உயிரிழப்பு!

Saturday, November 5th, 2016

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின்போது தாயும் சேயும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் பிரசவத்திற்காக மதவாச்சியைச் சேர்ந்த நிலுக்கா வீரசிங்க (32) என்ற பெண் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு இன்று (05.11) காலை சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாகவும், அதன் பின்னர் அதிக குருதி பெருக்கு காரணமாக அவசர சிகிக்சை பிரிவிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதன் பின்னரே குறித்த தாயும் சேயும் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.பிரசவத்தின்போது உயிரிழந்த பெண்ணுக்கு நான்கு வயது பெண் குழந்தையொன்று இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருடத்திலேயே இவ்வாறான சம்பவம் முதற்தடவையாக இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.குறித்த தாயையும், சேயையும் காப்பாற்றுவதற்கு எமது வைத்தியர்கள் கடுமையான முயற்சிகளைச் செய்திருந்தனர். இருப்பினும் அது பயனளிக்கவில்லை.

இது தொடர்பில் முழுமையான விசாரணை இடம்பெற்று வருகிறது. அதன்பின் குறித்த சம்பவம் தொடர்பில் கூற முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

DSC_0049

Related posts: