பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி புதிய குழு!

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்றின் பின்வரிசை உறுப்பினர்கள் குழு என்ற பெயரில், குழுவொன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த மாத இறுதியில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையியல் கட்டளைத் திருத்தங்களின் போது இந்த விசேட குழு தொடர்பிலான விடயங்களும் உள்ளடக்கப்பட உள்ளது. இந்தக் குழுவில் ஆளும் கட்சியின் மூன்று உறுப்பினர்களும் எதிர்க்கட்சியின் மூன்று உறுப்பினர்களும் மேலும் சில உறுப்பினர்களும் உள்வாங்கப்பட உள்ளனர்.
இந்தக் குழுவினை அவைத் தலைவர் வழிநடத்துவார் எனவும், அவைத்தலைவர் இல்லாத சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் வழி நடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றின் பின்வரிசை உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களது யோசனைத் திட்டங்கள் குறித்து இந்த குழுவினால் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
|
|