பிணையில் செல்ல சஜின் வாஸிற்கு நீதிமன்றம் அனுமதி!

Wednesday, September 21st, 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவை பிணையில் செல்ல கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலிபிடிய அனுமதியளித்துள்ளார்.

மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக சஜின் வாஸ் இருந்த வேளை, அந் நிறுவனம் கொள்வனவு செய்த பொருட்களால், 833 மில்லியன் ரூபா நஷ்டம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு நேற்று(20) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, சஜின் வாஸ் குணவர்தனவை இரண்டரை இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 மில்லியன் ரூபா சரீரப் பிணைகள் நான்கில் செல்ல அனுமதிக்கப்பட்டது.

sajin

Related posts: