பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய தேர் பவனி இன்று!

st_anthonys_church2 Wednesday, June 13th, 2018

பாஷையூர் புனித அந்தோனியார் வருடாந்த தேர் பவனி இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இன்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலி பூசை ஆரம்பமாகி நடைபெறும்.

தொடர்ந்து பிற்பகல் 3.45 மணிக்கு தேர்ப்பவனி ஆரம்பமாகும். இம்முறை தேர்ப்பவனி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி சென்.அன்ரனிஸ் வீதி சுவாமியார் குறுக்கு வீதி, வளன்புரம் சென்.ஜோசப் வீதி, கடற்கரை வீதி, மகேந்திரபுரம் சென்று மீண்டும் கடற்கரை வீதி வழியாக கொய்யாத்தோட்டம் புதுவீதி, பழையபூங்கா வீதி, ஈச்சமோட்டை வீதி, சென். அன்ரனிஸ் வீதி வழியாக மீண்டும் இரவு 8 மணிக்கு புனிதரின் தேர்ப்பவனி ஆலயத்தை சென்றடையும்.