பாவனையாளர் பாதுகாப்பு தினத்தையொட்டி கிராம மட்ட அமைப்புக்களுக்கு விழிப்புணர்வு!

பாவனையாளர் பாதுகாப்பு தினத்தையொட்டி கிராம மட்ட அமைப்புக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் செயலமர்வு ஒன்று (15-03-2017) இன்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது.
பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் கிளிநொச்சிக் கிளை இதனை ஏற்பாடு செய்திருந்தது. கிராம மட்டங்களில் உள்ள சமூக பிரதிநிதிகள் பலரும் இந்த கருத்து அமர்வில் பங்கேற்று பயன்பெற்றனர். பாவனையாளர்களின் உரிமைகள், கொள்வனவு, விற்பனைகளில் பாவனையாளர் எதிர்நோக்கும் சவால்கள் உள்ளிட்ட பல விடயங்கள் இந்த கருத்தமர்வின் போது தெளிவுபடுத்தப்பட்டது.
சமகாலங்களில் பிரதேசங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில் அதனை பொதுமக்கள் எவ்வாறு கையாளவேண்டும், என்பது உட்பட இது தொடர்பான உரிமைச்சட்டங்கள் தொடர்பிலும் விழிப்புணர்வு ஊட்டப்பட்டது.
மார்ச் 15 பாவனையாளர் பாதுகாப்பு தினத்தையொட்டியே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|