பாவனையாளர்களுக்கு மின்சார சபையின் விஷேட தள்ளுபடி!

Monday, March 28th, 2016

சிக்கனமாக மின்சாரத்தினை பயன்படுத்தும் நுகர்வோருக்கு, விசேட சலுகைகளை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, மின்சாரக் கட்டணத்தை, முதல் மாதக் கட்டணத்தை பார்க்கிலும், அடுத்த மாதம் 10 வீதம் குறைவாகப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு விஷேட தள்ளுபடி வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுகின்றது. எனினும், இக்காலநிலை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை கூறியுள்ளது. எனவே, மின்சாரத்தைச் சேமிக்கும் வகையிலேயே இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தும் தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையொன்றை வழங்குவதற்கும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: