பாவனைக்கு உதவாத 7000 கிலோகிராம் அரிசி மட்டக்களப்பு சிறைச்சாலையில் மீட்பு!

Thursday, November 24th, 2016
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு விநியோகிக்கப்பட்ட 7000 கிலோகிராம் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பாவனைக்கு உதவாதபொருட்கள்  என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சுகாதார பரிசோதகர்களால் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு உணவுக்காக விநியோகிக்கப்பட்ட 35 அரிசி மூடைகள் பழுதடைந்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது நுகர்விற்கு பொருத்தமற்ற 7000 கிலோகிராம் அரிசி, 20 கிலோ கிராம் கோவா, 20 கிலோகிராம் கத்தரிக்காய், 80 கிலோகிராம் பீட்ருட் கிழங்கு, 40 கிலோகிராம் செத்தல் மிளகாய், 26 கிலோ கிராம் கொத்தமல்லி, 25 கிலோகிராம் பருப்பு மற்றும் 200 கிலோகிராம் மீன் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் பின் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டன. இதேவேளை குறித்த களஞ்சியசாலையின் உரிமையாளருக்கு எதழராக வழக்கு தாக்கலும் செய்யப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மட்டக்களப்பு நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா களஞ்சியசாலை உரிமையாளருக்கு எதிரா 6000 ரூபா அபராதம் விதித்துள்ளார்.
மேலும், கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களையும் தீயிட்டு அளிக்குமாறும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நேற்று மாலை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

DSC07933-450x338

Related posts: