பாவனைக்கு உதவாத றம்புட்டான் பழங்கள் விற்பனை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை!

Monday, July 11th, 2016

யாழ். நகரில் பாவனைக்கு உதவாத அழுகிய றம்புட்டான் பழங்களை ஏனைய பழங்களுடன் சேர்த்து விற்பனை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாநகர சுகாதாரப் பகுதியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் றம்புட்டான் பழ சீசன் ஆரம்பாகியதையடுத்து யாழ். நகர் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதி பழக் கடைகளிலும், வீதியோரங்களிலும் றம்புட்டான் பழ விற்பனை அமோகமாக இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் வியாபாரிகள் பாவனைக்கு உதவாத அழுகிய பழங்களை நல்ல பழங்களுடன் சேர்த்து விற்பனை செய்து வருவதாகக் குற்றச் சாட்டு எழுந்துள்ள நிலையிலேயே மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: