பாவனைக்கு உதவாத சத்துணவுப் பொதிகள் – ப.நோ.கூ.ச. பணியாளர்களுக்கு 12 ஆயிரம் ரூபா தண்டம்!

Saturday, July 21st, 2018

பாவனைக்கு உதவாத பொருள்களை வழங்கினர் என்ற குற்றச்சாட்டில் கிளை முகாமையாளருக்கும் பொதி செய்யும் முகாமையாளருக்கும் தலா 6 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தது வவுனியா நீதிமன்று.

வவுனியா, ஈச்சங்குளத்தில் உள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்ட சத்துணவுப் பொருள்கள் பாவனைக்கு உதவாதவை என்ற குற்றச்சாட்டில் கிளை முகாமையாளர், பொதி செய்யும் முகாமையாளர் ஆகியோருக்கு எதிராக ஓமந்தை பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு வவுனியா நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கிளை முகாமையாளருக்கும் பொதி செய்யும் முகாமையாளருக்கும் தலா 6 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தது. பாவனைக்கு உதவாத பொருள்களை அழிக்குமாறும் உத்தரவிட்டது.

Related posts: