பால் உற்பத்தியாளர்களுக்கு  கொடுப்பனவை வழங்காததால் பால் உற்பத்தியாளர்கள் பாதிப்பு!

Saturday, June 2nd, 2018

புத்தளம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக பாலுக்கான கொடுப்பனவு கிடைக்காததால் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரபல பால் மா உற்பத்தி நிறுவனம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை சேகரித்து கொள்வனவு செய்யப்படும் பாலுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை பாலுக்கான கொடுப்பனவை வழங்கும். ஆனால் கடந்த இரு மாதங்களாக முறையாக பால் உற்பத்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கவில்லை என பால் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் மாவட்டத்தில் பெரும்பாலானோர் பால் உற்பத்தியை தமது ஜீவனோபாய தொழிலாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,  1,400 பேர் நாளாந்தம் 800 லீற்றர் பசும்பாலை குறித்த நிறுவனத்துக்கு வழங்கி வருவதாக பால் உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். குறித்த பால் மா நிறுவனம் முறையாக கொடுப்பனவை வழங்காது இதற்கு பல்வேறு காரணங்களை கூறி கொடுப்பனவை முறையாக வழங்காது விடுகின்றனர்.

இது குறித்து பால் உற்பத்தியாளர் ஒருவர் குறிப்பிடுகையில் இதுவே எமது வாழ்வாதார தொழில். இதனை நம்பியே வாழ்ந்து வருகிறோம். கடந்த 2 மாதங்களாக கொடுப்பனவு வழங்கப்படாததால் பொருளாதார ரீதியாக பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளோம்.இதுசம்பந்தமாக குறித்த நிறுவனத்துடன்  தொலைபேசி ஊடாக தொடர்புக்  கொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை என்றார்.

Related posts: