பாலின் விலையையும் அதிகரிக்க கோரிக்கை!

Saturday, January 28th, 2017

மாட்டுத் தீவனத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாலின் விலையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மாதம் வரை 40 கிலோ மாட்டுத் தீவனம் 1,050ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.கடந்த ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் விலை அதிகரித்து 1,450ரூபாவாக விற்பனை செய்ப்படுகிறது.

மாட்டுத் தீவனத்தின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டதால் பண்ணையாளர் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர் மாட்டுத் தீவனத்தின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தவதர்கள் பாலின் விலையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

jercyy_Liveday

Related posts: