பாரிய பண மோசடி:  லைகா மொபைல் நிறுவனத்தின் 19 பேர் கைது!

Wednesday, June 22nd, 2016

உலகளவில் பாரிய நிறுவனமாகத் திகழும் லைகா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
பல மில்லியன் பவுன்களுக்கும் அதிகமான நிதி வரி ஏய்ப்பு மற்றும் நிதி மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   கைதுசெய்யப்பட்டவர்களில் 09 பேர் பணமோசடி குற்றச்சாட்டிலும் 10 பேர் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் லைகா மொபைல் நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவரான அலெய்ன் ஜோசிமெக்கும் (Alain Jochimek) என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக தெரியவருவதாவது –

குறித்த நபர்கள் பல்வேறு வழிகளில் பண மோசடி செய்திருப்பதாகவும், சந்தேகத்துக்குரிய நிறுவனங்களிலிருந்து பல கோடி பவுண் பணம் லண்டன் தபால் நிலையங்கள் மூலம் பரிமாற்றப்படுவதைக் கண்காணித்துக் கண்டுபிடித்ததாகவும் பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

அத்துடன் அந்த நிறுவனம் தொலைபேசி முற்கொடுப்பனவு அட்டைகளை போலியான பற்றுச்சீட்டுக்கள் மூலம் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.  உலகில் பாரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக திகழும் லைகா மொபைல் சர்வதேச அளவில் உள்ள தமது வாடிக்கையாளர்களை ஏமாற்றி வந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லைகா மொபைல் நிறுவனத்தின் தலைவரான சுபாஸ்கரன் அல்லிராஜா (Subaskaran Allirajah) இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts: