பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குடாநாட்டக்கு திடீர் விஜயம்!

Sunday, July 24th, 2016

திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி வலி. வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

பலாலி இராணுவ படைத்தலைமையகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட அரச அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், இராணுவ தளபதி ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

கடந்த வராம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 1500 ஏக்கர் காணி விடுவிப்பு தொடர்பான முன்மொழிவில் 800 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு அனுமதி கிடைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே அது தொடர்பான ஆராய்வுகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்சி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார் என தெரியவருகின்றது.

Related posts: