பாதுகாப்புக்கு அவசியமான காணிகள் விடுவிக்கப்படமாட்டாது – அமைச்சர் ஜோன் !

Saturday, October 8th, 2016

படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புக்கு அவசியம் என கருதப்படும் காணிகள் விடுவிக்கப்படமாட்டாது என முக்கிய அமைச்சர்களில் ஒருவரான ஜோன் அமரதுங்க நாடாளுமன்றில் நடைபெற்ற காணி கையகப்படுத்தல் சட்டத்தின் திருத்தங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்  தெரிவித்துள்ளார்.

அதேவேளை வடக்கில் அரச படையினரால் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதால் அதன் உரிமையாளர்களான பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் அவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதன்போது பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாக ஏற்றுக்கொண்ட அமைச்சர், காணிகளை இழந்து தொடர்ந்தும் முகாம்களில் வாழும் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

17431

Related posts: