பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் குறித்து மனித உரிமைகள் நிலையம் ஆராய்வு!
Friday, June 29th, 2018பாதிப்புக்களுக்குட்பட்ட பெண்களுக்கான ஆலோசனைகளை வழங்குதலும் தீர்வுகளை கண்டறிதலும் தொடர்பான கலந்துரையாடல் மனித உரிமைகள் நிலையத்தினரால் யாழ்ப்பாணம் பாங்~hல் வீதியில் உள்ள அதன் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் நடத்தப்படவுள்ளது.
இன முரண்பாடுகளின் தாக்கத்திலிருந்து இன்றும் மீள முடியாத நிலையில் உள்ள பெண்கள் குறித்து இக் கலந்துiராயாடலில் ஆராயப்படும்.
தமிழ்ப் பெண்களின் குறிப்பாக பொருளாதாரப் பாதிப்புக்கள், மருத்துவ சுகாதாரப் பாதிப்புக்கள், பாதிப்புக்களின் மனவியல் தாக்கங்கள், வன்புணர்வுகளின் தாக்கம், முறையற்ற சடுதியான திருமணங்கள் தந்த தாக்கங்கள் என இவ்வாறு பாதிப்பிற்குள்ளான மக்களை எவ்வாறு இனம் காண்பது, இனம் காணப்பட்டவர்களின் தன்மையை அறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது, அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது ஆகியவை குறித்து மகளிர் சங்க அங்கத்தவர்களுடன் இக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
Related posts:
|
|