பாதணி விற்பனை நிலையமொன்றில் தீ!

Saturday, September 9th, 2017

கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள பாதணி விற்பனை நிலையமொன்றில் தீர்ப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.எனினும், விற்பனை நிலையத்தில் புகை சூழ்ந்துள்ளதால், புகையை வெளியேற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தீயணைப்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த தீ ஏற்பட்டமைக்கான உறுதியான காரணம் தற்போதுவரை கண்டறியப்படவில்லை. எனினும், மின் ஒழுக்கின் காரணமாக இந்த தீ அனர்த்தம் ஏற்பட்டிருக்காலம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தீயினால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து இதுவரை எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை.

Related posts: