பாதசாரி கடவையை பயன்படுத்தாத நபருக்கு தண்டப்பணம் விதிப்பு!

Thursday, February 9th, 2017

கிளிநொச்சியில் பாதசாரிக்கடவையூடாக வீதியை கடக்காமல் சாதாரணைமாக வீதியை கடந்தவருக்கு ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளநொச்சி ஏ9 வீதியின் பாதசாரிக் கடவையூடாக வீதியைக் கடக்காமல் வேறு பகுதியூடாக வீதியைக் கடந்தவருக்கு எதிராக பொலிஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் கிளிநொச்சிப் பொலிஸார் குறித்த நபரை நேற்றையதினம் (08) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதையடுத்து குறித்த நபருக்கு ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

yellow-crossing-415x260

Related posts: