பாடலாசிரியர் நா.முத்துகுமார் மரணம்!
Sunday, August 14th, 2016
இன்று காலை இளம் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம் அடைந்ததாக வந்துள்ள தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய விருது பெற்ற நா.முத்துக்குமாருக்கு இன்று கடுமையான காய்ச்சல் இருந்ததாகவும் அதன் காரணமாக அவர் மரணம் அடைந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது. 41 வயதே ஆன கவிஞர் நா.முத்துகுமார் தங்க மீன்கள் திரைப்படத்துக்காக எழுதிய ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற பாடலுக்கும் ‘சைவம்’ திரைப்படத்துக்காக எழுதிய ‘அழகே அழகே எதுவும் அழகே’ என்ற பாடலுக்கும் தேசிய விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
சித்திரைப் புத்தாண்டு விழாவுக்கு விண்ணப்பங்கள் கோரல்!
கொரோனாவால் மரணிப்பவர்களுள் 40 வீதமானோர் முஸ்லிம்களாக இருப்பது கவலைக்குரிய – தடுப்பூசிகளை விரைவாக பெற...
அணிசேரா நாடுகளின் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, உகண்டா வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!
|
|