பாடசாலை முடிவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியையின் பத்துப் பவுண் தாலிக்கொடி அபகரிப்பு !

Wednesday, July 12th, 2017

பாடசாலை முடிவடைந்து தனது வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியையின் பத்துப் பவுண் தாலிக்கொடி பட்டப்பகல் வேளையில் திருடர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுத் திங்கட்கிழமை(10) யாழ். சுண்டிக்குளிப் பகுதியில் நடைபெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

யாழ். நகரப் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் குறித்த ஆசிரியை பாடசாலை முடிவடைந்த பின்னர்  துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சுண்டிக்குளி விதான்ஸ் லேன் பகுதியில் மோட்டார்ச் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஆசிரியையின் பத்துப்பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Related posts: