பாடசாலை மாணவர்களுக்கும் , 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கும் சிகரெட் மற்றும் புகைப் பொருட்கள் விற்ற தேநீர்ச் சாலையின் உரிமையாளர் கைது!
Friday, October 14th, 2016பாடசாலை மாணவர்களுக்கும் , 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கும் சிகரெட் மற்றும் புகைப் பொருட்கள் விற்பனை செய்த குற்றச் சாட்டில் யாழ்.பெருமாள் கோயில் பகுதியிலுள்ள தேநீர்ச் சாலையின் உரிமையாளரை யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை(13) கைது செய்துள்ளனர்.
மேற்படி பகுதியிலுள்ள தேநீர்ச் சாலையில் பாடசாலை மாணவர்களுக்கும், சிறுவர்களுக்கும் சிகரெட் மற்றும் புகைப் பொருட்கள் விற்பனை செய்வதாக மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்குத் தொடர்ச்சியாகத் தகவல் கிடைக்கப் பெற்று வந்த நிலையிலேயே மேற்படி கடையினைச் சுற்றிவளைத்த அதிகாரிகள் நேற்று மேற்படி கடை உரிமையாளரைக் கைது செய்து விசாரணை நாடாத்தி வருகின்றனர்.
Related posts:
அரச, தனியார் நிறுவன ஊழியர்களின் தகவல்களை புதுப்பிக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை!
அதிபர்−ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பிலான பிரச்சினைக்கு அடுத்தவாரம் தீர்வு - அமைச்சரவை பேச்சாளர் அம...
சுகாதார சீர்கேடான உணவகங்கள் தண்டத்துடன் சீல் வைப்பு - பலசரக்கு கடைக்கு 60,000 தண்டம்!
|
|