பாடசாலை செல்லும் தாய்மாருக்கு சலுகை!

Friday, September 23rd, 2016

 

பிள்ளைகளின் தேருவைகருதி பாடசாலைகளுக்கு வரும் தாய்மார் கட்டாயமாக சேலை அணிந்தே வர வேண்டும் என்ற நடைமுறையில் நீக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், துறைசார் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேச பாடசாலைகளில் சில தேவைகளுக்காக பாடசாலைக்குள் செல்லும் தாய்மார் சேலை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் கவ்வி அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார். இந்த நடைமுறையை நீக்க கோரி பாடசாலை அதிபர்கள் மற்றும் அதிகாரிகளை தெளிவுப்படுத்தி சுற்றுநிருபம் அனுப்புமாறு தனது அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்களின் தாய்மார் பல்வேறு துறைகளில் தொழில் புரிவதாகவும் குறித்த தொழில்களுக்கு ஏற்றவாறே அவர்களது உடைகளும் காணப்படுவதாகவும், தொழில் செய்யும் இடங்களில் இருந்தவாறே அவசர வேலை நிமித்தம் பாடசாலைக்கு வரும் தாய்மார் சேலை அணியாத பட்சத்தில் பாடசாலைக்குள் உள்நுழைய அனுமதிக்கப்படுதில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எனவே குறித்த காரணங்களை அடிப்படையாகக் கொண்டு கல்வி அமைச்சர் தாய்மார் சேலை அணிவது கட்டாயம் என்ற நடைமுறையை மாற்றுவதற்கு முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

v0053

Related posts:

மாற்றுத் திறனாளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள்: வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து மாற்றுத் திறன...
ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் தொடர்பில் 10 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசார...
தேவையற்ற விதத்தில் அதிகமான ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் - நிறுவனங்களின் தலைவர...