பாடசாலைப் பேருந்து சேவைகளில் நேரமாற்றம்!

Monday, January 2nd, 2017

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பாடசாலைப் பேருந்து சேவைகளில் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி சாலை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது பாடசாலைகள் 2017ஆம் ஆண்டில் கல்வி நடவடிக்கைகளுக்காக காலை 7.30மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கமைவாக இ.போ.சபையின் பேருந்து சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் புதியநேர ஒழுங்குகளுக்கு அமைவாக இன்று முதல் சேவை நடைபெறும் எனவும் சாலை முகாமையாளர் அறிவித்துள்ளார். அதன்படி கிளிநொச்சி சிவபுரம் காலை 6.40 காஞ்சிபுரத்திலிருந்து பரந்தன் இந்து மாகா வித்தியாலயம் காலை 7.10 மணிக்கும் விசுவமடு றெட்பானாவிலிருந்து முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரிக்கான சேவை காலை 6.40 மணிக்கும்  அரசபுரம் முக்கொம்பன் சேவை காலை 7 மணிக்கும் மன்னித்தலை பூநகரி மகா வித்தியாலயத்திற்கான சேவை காலை 6.20 மணிக்கும் யாழ்ப்பாணம் திருவையாறுக்கான சேவை காலை 6.05 மணிக்கும்

யாழ்ப்பாணம் வட்டக்கச்சி சேவை அதிகாலை 5.40 மணிக்கும் யாழ்ப்பாணம் முக்கொம்பன் கிளிநொச்சிக்கான  சேவை அதிகாலை 5.45 மணிக்கும் யாழ்ப்பாணம் – மாங்குளம் ஊடாக முல்லைத்தீவுக்கான சேவை காலை 7.15 மணிக்கும் மாற்றப்பட்டுள்ளதாகவும் பாடசாலை முடிவுறும் நேரங்களுக்கு அமைவாக சேவைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கிளிநொச்சி சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

CTB-bus

Related posts: