பாடசாலைகளில் தைப்பொங்கல் விழாவை மார்கழியில் கொண்டாடுவது கவலையளிக்கிறது – வடமாகாண ஆசிரியர் ஆலோசகர் சங்கம்!

Friday, January 13th, 2017

பாடசாலைகளில் தைப்பாங்கலை மார்கழி மாதத்தில் கொண்டாட வைப்பது கவலை தரும் விடயமென வட மாகாண ஆசிரியர் ஆலோசகர் சங்கம் தெரிவித்துள்ளதுடன் பிறிதொரு தினத்தில் பொங்கலை கொண்டாடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளது.

மத்திய கல்வியமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக இன்று வெள்ளிக்கிழமை வடமாகாணப் பாடசாலைகளில் பொங்கல் விழாவைக் கொண்டாடுமாறு சகல பாடசாலைகளுக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் பாரம்பரியப் பொங்கலை மார்கழி மாதத்தில் இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்து. தைப்பொங்கலை மார்கழிப் பொங்கலாக கொண்டாட வைப்பது மிகுந்த வேதனைக்குரியது எனவும் மேற்படி சங்கம் தெரிவித்துள்ளது.

IMG_7443

Related posts: