பல்கலை மாணவர்கள் கொலை தொடர்பில்  5 பொலிஸாரினதும் விளக்கமறியல் நீடிப்பு.!

Friday, December 2nd, 2016

யாழ்.பல்கலை மாணவர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள 5 பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது மோட்டார் வாகனம் பாதையை விட்டு விலகியமை காரணமாகவே மாணவர்கள் உயிரிழந்தார்கள் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதன் பின்னர், மரணமடைந்த மாணவர்களின் பிரேத பரிசோதனைகளில் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து, குறித்த 5 பொலிஸ் அதிகாரிகளினதும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த படுகொலை சம்பவம் கடந்த மாதம் 20 ஆம் திகதி யாழ். கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

jaffna-police-300x240

Related posts:


சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது - நுகர்வோர் பாது...
பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ஜனாதிபதி ரணில் களமிறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு தவறல்ல - அமைச்சர் ப...
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் சனத்தொகையில் வீழ்ச்சி - பதிவாளர் திணைக்களத்தின் புள்ளி விபரத்தகவ...