பல்கலைக்கு அனுமதிக்கப்படும் வரையான 10 மாதங்களுக்கும் மேலான காத்திருப்பு இடைவெளியை நீக்குவதற்கு நடவடிக்கை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!
Sunday, December 19th, 2021க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் வரையான 10 மாதங்களுக்கும் மேலான காத்திருப்பு இடைவெளியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வருடத்திற்கான க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள், திட்டமிடப்பட்ட திகதிகளில் எவ்வித மாற்றமுமின்றி நடைபெறும் எனவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காற்றின் தாக்கத்தினால் யாழில் மீன்களின் பிடிபாடு குறைவு!
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில் தொழிற்சங்க போராட்டம் துரதிஸ்டவசம...
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு எதிர்பார்ப்பு - வர்த்தக அமைச்சர் ந...
|
|