பல்கலைக்கழக மாணவி  கடத்தப்பட்டார்!

Wednesday, August 17th, 2016

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மண்டூர் தம்பலவத்தைப் பகுதியில் வீதியால் சென்ற பல்கலைக்கழக மாணவி ஒருவர் இனம்தெரியதவர்களால் வான் ஒன்றில் நேற்று கடத்திச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது..

கடத்திச் செல்லப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் பொலிஸாருக்கு வழங்கிய அவசர தகவலையடுத்து, வெல்லாவெளி பிரதான வீதியில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் வானை நிறுத்த முற்பட்டபோது அவர்களின் சமிக்கையை மீறி தப்பிச் சென்றதாகவும் பின்னர் கொக்கட்டிச்சோலை பொலிஸார் வாகனச் சாரதி உட்பட இருவரை மீட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட நபர்கள் மூவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்த பொலிஸார் கடத்திச்செல்லப்பட்ட மாணவியை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்

Related posts: