பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கு புதிய சம்பளத் திட்டம்!
Tuesday, January 3rd, 2017பல்கலைக்கழக கல்விசார் விரிவுரையாளர்களுக்கு 2017 ஜனவரி 1 முதல் புதிய சம்பளத்திட்டம் அமுலுக்கு வரவுள்ளது.இது இரண்டு வருடங்களுக்கு முன்னதான அரச அறிவித்தலின்படி இச்சம்பள உயர்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி பல்வேறு கொடுப்பனவுகள் அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்படவுள்ளது. இச்சம்பள மாற்றத்தோடு கைக்கு கிடைக்கும் தொகை முன்னதைவிட குறைக்கப்பட்டுள்ளதால் இது தொடர்பாக ஆராய்வதற்கு பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம் எதிர்வரும் 8ஆம் திகதி கூடவுள்ளது. இதனடிப்படையில் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் விரிவுரையாளர்களது. பீடரீதியான தொழிற்சங்கங்களின் கூட்டங்கள் கூடி தமது தீர்மானங்களை பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்திற்கு அறிவிக்கவுள்ளன.
பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீட விரிவுரையாளர்களது சங்கம் இது தொடர்பான விசேட பொதுக்கூட்டத்தினை நாளை புதன்கிழமை பிற்பகல் 12 மணிக்கு கூட்டவுள்ளது.
Related posts:
|
|