பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிபெற்ற மாணவர்களின் விவரங்களை வெளியிட நடவடிக்கை!

Monday, January 9th, 2017

கல்விப் பொதுத் தாராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களின் விபரங்களை வெளியிடுவது தொடர்பான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழககங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்பகான விண்ணப்பங்கள் இந்த மாதத்தில் கோரப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மோகான் சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலிக்க விரும்பும் மாணவர்கள் இம்மாதம் 23 ஆம் திகதிக்கு முன்னர் திணைக்களத்திற்கு விணப்பிக்க வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

மாணவர்கள் தமது மீள் பரிசீலனை விண்ணப்பங்களை உரிய பாடசாலை அதிபர் ஊடாக அனுப்பி வைக்க வேண்டும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ளமுடியும்.

தொலைபேசி இலக்கங்கள் – 0112 – 784 208 அல்லது 0112 – 784 537 அல்லது அவசர தொலைபேசி இலக்கம் 1911.

University-Grants-Commission-Sri-Lanka-logo_0_0

Related posts: