பல்கலைகழக பிக்கு மாணவர் ஒன்றிய இணைப்பாளர் கைது!

Friday, June 23rd, 2017

பல்கலைகழக மாணவர்கள் பலவந்தமாக சுகாதார அமைச்சுக்குள் நுழைந்த போது காவற்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்து தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைத்து பல்கலைகழக பிக்கு மாணவர் ஒன்றிய இணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட அவர் காவற்துறையின் பாதுகாப்புடன் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சைட்டம் கல்லூரியை மூடுவது தொடர்பில் கடந்த தினம் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடும் நோக்கில் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட மாணவ சங்கங்கள் சுகாதார அமைச்சுக்குள் முன்பாக ஒன்று திரண்டனர். இதனையடுத்து, பலவந்தமாக சுகாதார அமைச்சுக்குள் உள்நுழைந்த மாணவர்களை வெளியேற்றுவதற்காக காவற்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தடியடி தாக்குல்களை நடாத்தினர்இதன்போது காயமடைந்த காவற்துறையினர் உள்ளிட்ட 96 பேர் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related posts:


அரசாங்கம் எதையும் செய்யவில்லை என்று கூறும் கூட்டமைப்பினர் தம்மிடம் உள்ள அதிகாரங்களைக் கொண்டு என்ன செ...
2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரத்திற்கான அனைத்து செயன்முறை பரீட்சைகளும் இரத்து - பரீட்சைகள் திணைக்கள...
ஒரு லீற்றர் பாலின் விலை 120 ரூபாவரை அதிகரிக்கப்பட வேண்டும் - பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் தேச...