பலமாத மின் கட்டணங்கள் சேர்த்து ஒரே சிட்டையில் அனுப்பியுள்ளது என  முல்லை மாவட்ட மக்கள் குற்றச்சாட்டு:  பகுதியாக செலுத்தலாம் என்கிறது மின்சாரசபை!

Thursday, January 19th, 2017

6மாத காலத்துக்கான மின்சாரக் கட்டணத்தை ஒரே தடவையில் செலுத்த வேண்டும் என்று மின்சார சபையினர் கோரியுள்ளனர். அதனால் பல அசௌகரியங்களை எதிர்கொள்கன்றோம் என்று முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல மாதங்களின் மின்சாரக் கட்டணம் ஒரே சிட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் கட்டணத்தை ஒரே தடவையில் செலுத்த வேண்டியதில்லை. அதைப் பகுதி பகுதியாகச் செலுத்தலாம் என்று மின்சார சபையினர் குறிப்பிட்டனர். கொக்கிளாய் முதல் விசுவமடு வரையும் மாங்குளம் வீதியில்  கரிப்பட்ட முறிப்பு வரையும் நெடுங்கேணி முதல் ஒலுமடு வரையுமான பகுதிகள் முல்லைத்தீவு மாவட்ட மின்சார சபைக்குள் அடங்குகின்றன. மாவட்டத்தில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு ஓர் ஆண்டு கடந்துள்ளது. இதுவரை பல வீடுகளுக்கு மின் கட்டணச் சிட்டைகள் வழங்கப்படவில்லை.

தற்போது 6 மாதங்களுக்கான மின் கட்டணம் ஒரே சிட்டையில் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. ஒரே தடவையில் கட்டணத்தைச் செலுத்துவது இயலாத காரியம். பகுதி பகுதியாகச் செலுத்த மின்சார சபை இணங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல இடங்களுக்கு ஒரே தடவையில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. தற்போதே ஒவ்வொரு இடமாக நாம் கட்டணச் சிட்டைகள் வழங்குகின்றோம். குறிப்பிட்ட காலத்துக்குரிய மின்சாரக் கட்டணப் பட்டியல் ஒரே சிட்டையில் வந்தாலும் அதைப் பகுதிப் பகுதியாகச் செலுத்தலாம் என்று மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர்.

201605270024404404_100-units-of-free-electricity-project_SECVPF

Related posts: