பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 இலட்ச்சத்து 22 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான கஞ்சாப் பொதி மீட்பு!
Friday, June 24th, 2016
மாதகல் கடற்கரையை அண்டியுள்ள பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 இலட்சத்து 22 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான ஒரு கிலோ 290 கிராம் அளவுடைய கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சாப் பொதி நேற்று வியாழக் கிழமை(23) கடற்படையினரால் மீட்கப்பட்டு இளவாலைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடல் மார்க்கமாகக் கடத்தி வரப்பட்ட குறித்த கஞ்சாப் பொதி வெளியிடத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதற்காக இந்தப் பகுதியிலுள்ள பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடற்கரைப் பகுதியை அண்மித்த பகுதியைத் துப்பரவு செய்து கொண்டிருந்த போது குறித்த கஞ்சாப்பொதி மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
மீட்கப்பட்ட கஞ்சாவினை மல்லாகம் நீதிமன்றத்தில் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையில் இணையயுத்தம் வருமா?
விவசாயத்துறையை நவீனமயப்படுத்த நிதி ஒதுக்கீடு – விவசாய அமைச்சு!
உளுந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை - பிரதமர் மஹிந்த அதிரடி உத்தரவு!
|
|