பறவைகள் மூலமும் மலேரியா பரவ வாய்ப்பு!
Sunday, March 27th, 2016மலேரியா நோய் நுளம்புகள் மூலம் பரவுகிறது என்ற கருத்து பொதுவாக உள்ளது. ஆனால் அவை பறவைகள் மூலமும் பரவுகிறது என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் ஹோலி லட்ஸ் பகுதியில் உள்ள கார்னல் பல்கலைக்கழக நிபுணர்கள் சமீபததில் இது குறித்து ஆய்வு நடத்தினர். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் நூற்றுக்கணக்கான பறவைகள், வவ்வால்கள் மற்றும் பாலூட்டி இன விலங்குகளிடம் இருந்து ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதித்தனர்.
ஆவற்றில் மலேரியா நோயை பரப்பும் கிருமிகள் இருந்தன. அதுகுறித்து தீவிரமாக ஆராய்ச்சி நடத்திய போது மலேரியா கிருமிகள் முதலில் பறவைகளிடம் இருந்து தான் பரவுகிறது என தெரிய வந்தது. அதன் பிறகுதான் அவை வவ்வால்கள் மற்றும் பாலூட்டிகளுக்கு பரவுகின்றன.
அதே நேரத்தில் மனிதர்களுக்கு எப்படி பரவுகிறது என்பதை கண்டறிய முடியவில்லை. அதுகுறித்து தொடர்ந்து ஆய்வு நடைபெறுகிறது என கூறப்பட்டுள்ளது.
Related posts:
|
|