பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதி இன்றும் மூடப்படும்

Wednesday, October 25th, 2017

பருத்தித்துறை நல்லூர் ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் முதன்மைச் சாலை நல்லூர் ஆலயச் சூழல் வீதி இன்றும் மூடப்படும் என யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இடம்பெறும் கந்தசஷ்டி திருவிழா காரணமாகவே வீதி தடை செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

கந்தசஷ்டி விரத நாளின் இறுதி இருநாள்களும் நல்லூரில் நடைபெறவுள்ள சுவாமி வீதி உலா மற்றும் சூரசங்கார நிகழ்வுகளை முன்னிட்டு ஆலயச் சூழலினூடாக வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று பி.ப 2 மணி தொடக்கம் 6 மணி வரையும், இன்று மதியம் 12 மணி தொடக்கம் இரவு 7 மணி வரையும் இது நடைமுறையில் இருக்கும். பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதியால் பயணிக்கும் வாகனங்கள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறும் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts: