பருத்தித்துறையைச் சேர்ந்த  ஒருவர் மாயம் -தகவல் தரும்படி பொலிஸார் கோரிக்கை!

download (4) Monday, March 12th, 2018

பருத்தித்துறை குடத்தனை கிழக்கைச் சேர்ந்த 29 வயதான செல்வராசா அருந்தவச்செல்வன் என்ற நபர் கடந்த 9 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது மனைவியான அருந்தவச்செல்வன் ரதி என்பவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5 அடி அரை அங்குலம் உயரமும் மாநிறமும் பெரிய உடலமைப்பும் உடையவர் எனவும் இறுதியாக கறுப்பு நிற காற்சட்டையும் நீல நிற கட்டமிட்ட மேற்சட்டையும் அணிந்திருந்ததாகவும்பொலிஸார் கூறியுள்ளனர்.

இவர் பற்றிய விபரங்களை அறிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!