பருத்தித்துறையில் 7 பேர் கைது: தங்க நகைகளும் மீட்பு !
Tuesday, September 6th, 2016பருத்தித்துறைப் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 17 பவுண் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த முதலாம் திகதி பருத்தித்துறை அல்வாய் வடக்குப் பகுதியிலுள்ள வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நுழைந்து 11 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து வீட்டினுடைய உரிமையாளரால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டன. இந்த முறைப்பாடு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் நகைகளில் 17 பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.அதன் பின்னர் குறித்த சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|