பரீட்சை மேற்பார்வையாளர்கள் நால்வருக்கு வாழ்நாள் தடை?

Wednesday, August 17th, 2016

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டிருந்த கண்காணிப்பாளர்கள் நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நால்வருக்கும் பரீட்சை மண்டபங்களில் பணி புரிவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

கிரிஉல்ல, நுவரெலிய மற்றும் வெலிவேரிய ஆகிய கல்வி வலயங்களில் கடமைகளில் ஈடுபட்ட கண்காணிப்பாளர்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்முறை உயர்தரப் பரீட்சைகள் குறித்து 50 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

ஏனையவை சிறு சிறு சம்பவங்கள் என்பதோடு அவை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts: