பரீட்சார்த்திகளுக்கான வழிகாட்டல் பயிற்சிகள்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில் வாய்ப்புக்களை பெருக்கி தொழில் வாய்ப்பற்றோர் எண்ணிக்கையினை குறைப்பதற்காக நடைமுறைபடுத்தப்பட்டு வரும் செயற்பாடுகளுக்கு அமைய, எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள அரச துறையின் மத்திய, மாகாண அமைச்சுக்கள் திணைக்களங்களுக்கான ஆட்சேர்ப்புக்கள் மற்றும் ஏனைய பரீட்சைகளுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் பரீட்சார்த்திகளுக்கான வழிகாட்டல் பயிற்சிகள் யாழ்.மாவட்ட செயலகத்தின் பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையத்தினால் துறைசார் நிபுணர்கள் மூலமாக இலவசமாக நடத்தப்படவுள்ளது.
இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் விண்ணப்பதாரிகள் இம்மாதம் 11 ஆம் திகதிக்கு முன்னர் யாழ்.மாவட்ட செயலகத்தின் பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையத்திற்கு நேரில் வருகை தந்து அல்லது 021 221 9359 இலக்க அலுவலத் தொலைபேசி ஊடாக தங்கள் பதிவினை மேற்கொள்ளலாம் என யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.
Related posts:
|
|