பயிற்றுவிப்பாளர்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

Friday, November 24th, 2017

காரைநகர் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறும் பயிற்சி நெறிகளுக்கு பயிற்றுவிப்பாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

சங்கீதம், நடனம், சித்திரம், நாடகம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய பயிற்சி நெறிகளுக்கான பயிற்றுவிப்பாளர்களுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமது சுயவிபரக் கோவையை உடனடியாக காரைநகர் கலாசார மத்திய நிலையத்துக்கு நேரடியாகவோ தபால் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு காரைநகர் கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பிப்போர் காரைநகர் பிரதேசத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். சிறந்த உடல் உள நலம் உள்ளவராக இருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரி பாரம்பரிய கலைஞராக இருத்தல் அல்லது கலை தொடர்பாக சிறந்த பிரயோக அறிவு உடையவராக இருத்தல் அல்லது குறித்த துறையில் பல்கலைக்கழகத்தால் அல்லது அரச நிறுவனம் ஒன்றால் வழங்கப்பட்ட பட்டம் அல்லது டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

Related posts: