பயிர் சேதங்களுக்கான காப்புறுதித் திட்டம் – நிதியமைச்சு!

பயிர் சேதங்களுக்கான காப்புறுதித் திட்டம் இதுவரை பெரும்போக விவசாயிகளுக்கு மாத்திரம் இழப்பீடு வழங்கப்பட்டது.இந்த காப்புறுதி திட்டமானது இந்த வருடம் முதல் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயம், மிளகாய், சோளம், சோயா போன்ற பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கும் வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த காப்புறுதித் திட்டத்தின் கீழ் நெற்செய்கையாளர்களுக்கு ஒரு ஏக்கர் பயிர் சேதத்திற்காக 10 ஆயிரம் ரூபா அல்லது ஹெக்டயருக்கு 25 ஆயிரம் ரூபா இழப்பீடு விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையினால் வழங்கப்படுகிறது.பயிர்ச் செய்கைக்காக பெற்றுக் கொண்ட திருப்பிச் செலுத்த முடியாத விவசாயிகளுக்கு சலுகை வழங்கும் முறையொன்றும் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொண்டர் ஆசிரியர்களுக்கு அவசர கலந்துரையாடல்!
பாடசாலை சீருடை துணிகளை மாணவர்களுக்கு நேரடியாக வழங்குவதற்கு அரசு தீர்மானம்!
கொவிட் தொற்றால் மேலும் 48 பேர் உயிரிழப்பு!
|
|