பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாத்து கொள்ள விவசாயிகளுக்கு துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
Monday, January 22nd, 20242 ஏக்கர் விவசாய காணி உள்ள விவசாயிகளுக்கு தங்களது பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாத்து கொள்ள துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பல்வேறு பிரதேசங்களில் உள்ள விவசாயப் பிரச்சினைகள் தொடர்பில் விவசாயிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சட்டரீதியாக 5 ஏக்கருக்கு மேலதிகமான விவசாய காணி உள்ள விவசாயிகளுக்கு மாத்திரமே துப்பாக்கிகள் வழங்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் வன விலங்குகளால் பயிர்களில் ஏற்படும் சேதங்கள் அதிகரித்துள்ளதால் பயிர் செய்கைகளை கைவிடும் நிலையில் உள்ளதாக அமைச்சரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
காங்கேசன்துறை கடலில் 9கோடி பெறுமதிமிக்க ஹெரோயின் மீட்பு!
சிவராத்திரி வழிபாடுகளில் ஆகக் கூடியதாக 50 பேரை மட்டும் அனுமதிக்குமாறு வலியுறுத்து!
போர் வெற்றி என்பது தனிநபருக்குரியது அல்ல. அது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி - ஓய்வுபெற்ற மேஜர் ஜ...
|
|
வாகன இலக்க தகடுகளில் மாகாணங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கான அமைச்சரவை அனுமதி !
கொரோனா தொற்றுக்கு மத்தியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு - சுகாதார தரப்பினர் எச்சரிக...
சமூக ஒற்றுமையுடன் எதிர்காலத்தை தூக்கி நிறுத்த உழைப்பாளர் தினத்தில் உறுதிபூணுவோம் – யாழ் மாநகரின் முன...