பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்!

Friday, November 3rd, 2017

பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் ஜேன் லெம்பர்ட் இதைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் முயற்சிகளுக்கமைய மீண்டும் ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியம் கோரியிருந்த விடயங்களில் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி, அதற்கு பதிலாக புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது.

ஆனால் இவ்விடயத்தில் முன்னேற்றம் இல்லாதிருப்பது அதிருப்தி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: