பனை ஓலையிலான அரச்சனைத் தட்டுகள் நல்லூரில் விற்பனையில்!

Friday, August 17th, 2018

நல்லூர் ஆலய சுற்றாடலில் பனை ஓலையில் தயாரிக்கப்பட்ட அரச்சனைத் தட்டுகளைப் பனை அபிவிருத்திச் சபை விற்பனை செய்யவுள்ளது.

நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த திருவிழாவில் ஆலயத்தின் முன்னாகவுள்ள சபையின் சிறப்பு அங்காடியில் இந்த அர்ச்சனைத் தட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு சிற்பங்களில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த அழகான அரச்சனைத் தட்டுகள் யாவும் சபையின் உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. திருவிழாவையொட்டி அதிகளவான அர்ச்சனைத் தட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.