பதிவுத் திகதியில் மாற்றம் : கிழக்கு பல்கலைகழக பதிவாளரின் அறிவிப்பு!

Tuesday, January 3rd, 2017

2015ஆம் மற்றும் 2016 ஆண்டு கிழக்கு பல்கலைகழகத்தில் அனுமதி பெற்ற கலை கலாசார பீடத்திற்குரிய புதிய மாணவர்களை பதிவு செய்யும் திகதி மாற்றப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

05.01.2017ஆம் அன்று நடைபெற நடைபெறயிருந்த கலை கலாசார பீடத்திற்குரிய புதிய மாணவர்களை பதிவு செய்யும் திகதி மாற்றப்பட்டுள்ளது. இந்த பதிவு எதிர்வரும் 19.01.2017ஆம் திகதி அன்று நடைபெறும்.

எதிர்வரும் 19.01.2017ம் திகதி பதிவுகளை மேற்கொள்வதற்கு வருகைதரும் கலை கலாசார பீட மாணவர்களுக்குரிய வகுப்புக்கள் அன்றைய தினமே ஆரம்பிக்கப்படயிருப்பதினால் விடுதியில் தங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளுடனும் மாணவர்களை தயார்ப்படுத்தி வருமாறும் கலை கலாசார பீட அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்கள் தேவைப்படும் மாணவர்கள் உதவிப் பதிவாளர் மாணவர் விவகாரப்பிரிவின் 0652240731 என்ற தொலை பேசி இலக்கம், அர்ரது கலை கலாசார பிரிவின் 0652240971 தொலை பேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்ட விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அதே வேளை எதிர்வரும் 17ஆம் திகதி சௌக்கிய பராமரிப்பு பீடத்தினதும், 18ஆம் திகதி விவசாய விஞ்ஞான தொழில்நுட்பப் பீடத்தினதும் 19ஆம் திகதி வர்த்தக முகாமைத்துவ பீடம் ஆகியவற்றின் முதலாம் வருடத்துக்கான மாணவர்கள் பதிவுகளும் நடைபெறவுள்ளதாகவும் பதிவாளர் அறிவித்துள்ளார்.

பின்வரும் தொலை பேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு  உதவிப்பதிவாளர்களிடம் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும.

 விஞ்ஞான பீடம்– 065 2240758,

சௌக்கிய பராமரிப்பு பீடம் – 065 2227025, 

விவசாய பீடம், உயிரியல் தொழில்நுட்பம் 065 2240740, 

வர்த்தக முகாமைத்துவ பீடம் – 065 2240591 

d2528ac10059b65538eada15b096867c_XL

Related posts: