பதிவுகள் மேற்கொண்டாலே மீனவர்களுக்கு இழப்பீடுகள் – யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளர் !

Thursday, January 5th, 2017

இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும்போது  பாதிக்கப்படும் மீனவர்கள் இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் உடனடியாக பதிவு செய்ய வேண்ம் என் யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யாழ்.மாவட்டத்தில் 20ஆயிரம் மீனவக் குடும்பங்கள் உள்ளன. 5,493 மீனவக் குடும்பங்கள் மட்டுமே தற்போழுது வரை பதிவு செய்துள்ளன. ஏனைய குடும்பங்கள் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளாது இருப்பதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது அண்மையில் கூட இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுப்பதில் பல சிரமங்களைச் சந்திக்க நேர்ந்தது.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பதிவு செய்யப்படாமல் இருந்தன. அவர்களுக்கான காப்புறுதிகள், அவர்களுக்கான சலுகைகள் போன்றவற்றைப் பெறுவதில் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. யாழ்.மாவட்டத்தில் 110 கடற்றொழில் சங்கங்கள் உள்ளன. மீனவக்குடும்பங்கள் பிரதேசங்களுக்கு அண்மையில் உள்ள கடற்றொழில் சங்கங்களில் உடனடியாக பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

miinavarkal

Related posts: