பதவி விலகினார் மத்திய வங்கி ஆளுநர் லக்ஷ்மன் – கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு!

Tuesday, September 14th, 2021

கடந்த 2019 டிசம்பர்முதல் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்துவந்த பேராசிரியர் W.D. லக்ஷ்மன், இன்றுமுதல் தமது பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்ததாகவும் பேராசிரியர் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்..

அதற்கமைய,  இன்று தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறவுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நாளையதினம் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: