பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மின்சார தடை இல்லை!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படும் என பிரதி மின்வலு அமைச்சர் அஜித் பெரேரா தெரவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று(29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில் –
பண்டிகைக் காலத்தில் 24 மணித்தியாலங்களும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த நாட்களில் இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவங்களினால் மின்சாரத்தை சேமிக்கும் நீண்ட கால திட்டமொன்று முன்னெடுக்கப் படவுள்ளது.இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க அமைச்சரவையில் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
திருநெல்வேலி கிழக்கு,மேற்கு வீதிகளை புனரமைப்புச் செய்ய நடவடிக்கை எடுத்துத் தருமாறு ஈ.பி.டி.பியினரிடம...
பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு - அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ள...
மத்திய வங்கி ஆளுநராக மீண்டும் பதவியேற்கவுள்ளதை உறுதி செய்த அஜித் நிவாட் கப்ரால்!
|
|