பண்டிகைக் காலத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்போர் தொகை அதிகரிப்பு – எச்சரிக்கிறது பாதுகாப்பு அமைப்பு!

பண்டிகைக்காலத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் உயிர் பாதுகாப்பாளர்கள் சங்கம், நீர் நிலைகளில் நீராடச் செல்லும் மக்கள் அவதானத்துடன் இருக்கவேண்டும் என எச்சரித்துள்ளது.
பண்டிகைக்காலத்தில் நீர் நிலைகளில் ஏற்படும் உயிர் ஆபத்து சம்பவங்கள் தொடர்பில் உயிர் பாதுகாப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசகர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எச்.எச்.சூலசிறியை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பண்டிகைக்காலப்பகுதியில் நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்திருப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. கடல் மற்றும் ஆறு போன்ற நீர்நிலைகளில் நீராடுவதற்கு அல்லது விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு பாதுகாப்பான நீர் நிலைகளைத் தெரிவு செய்யவேண்டும். இதேவேளை நீர்நிலைகளில் நீராடச் செல்பவர்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற கொடி காணப்படும் பகுதியில் உயிர் பாதுகாவலரின் உதவியையும் ஆலோசனையையும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் நீராட செல்பவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். என்றார்.
Related posts:
|
|